Jasprit Bumrah || இலங்கை டெஸ்ட் தொடர் - காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விலகல்?

Jasprit Bumrah || இலங்கை டெஸ்ட் தொடர் - காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விலகல்?

Jasprit Bumrah || இலங்கை டெஸ்ட் தொடர் - காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விலகல்? இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து, இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரில் உள்ள பிசிசிஐ-ன் சிறப்பு மையத்தில் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், பும்ராவின் இடது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் முழுமையாகக் குணமடையவில்லை என்பதும், இன்னமும் லேசான அசௌகரியம் நீடிப்பதும் கண்டறியப்பட்டது. ​எதிர்வரும் தொடர்ச்சியான முக்கிய போட்டிகளை கருத்தில் கொண்டு, பிசிசிஐ மருத்துவக் குழு அவரை அவசரப்பட்டு விளையாட வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஆகஸ்ட் 15-ஆம் தேதி இலங்கையில் தொடங்கவுள்ள இந்த டெஸ்ட் தொடரில் பும்ராவுக்கு மாற்றாக விளையாடப்போகும் வீரரின் பெயரைத் தேர்வுக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

X

Thanthi TV
www.thanthitv.com