Jackie Chan | ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்ற ஜாக்கி சான் - வழிநெடுகிலும் திரண்ட FANS

x

ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்ற ஜாக்கி சான் - உற்சாக வரவேற்பு

உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான் பண்டைய ரோமானிய நகரமான பொம்பேயில் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி ஓடினார். 2026ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலியில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் தொடங்கியுள்ள நிலையில் கரடு முரடான பாதைகளில் ஜாக்கி சான் ஒலிம்பிக் ஜோதியை எடுத்துச் சென்றார். அப்போது, வழிநெடுகிலும் ரசிகர்கள் திரண்டு ஜாக்கி சானுக்கு உற்சாக வரவவேற்பு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்