இத்தாலி ஓபன் - சாம்பியன் பட்டம் வென்ற அல்கராஸ்

x

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினைச் சேர்ந்த நட்சத்திர வீரர் அல்கராஸ் (alcaraz) மகுடம் சூடியுள்ளார்.

ரோம் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர்ப் பிரிவு இறுதிப்போட்டியில் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இத்தாலி வீரர் சின்னருடன் அல்கராஸ் மோதினார்.

போட்டியில் சிறப்பாக விளையாடிய அல்கராஸ், முதல் செட்டை டை-பிரேக்கரில் (tie break) 7க்கு 6 என்ற கணக்கில் போராடி வென்றார். 2வது செட்டில் அதிரடி காட்டிய அல்கராஸ், 6க்கு 1 என்ற கணக்கில் அதனைக் கைப்பற்றி நேர் செட்களில் போட்டியில் வெற்றி பெற்றார்.

இதன்மூலம் இத்தாலி ஓபன் சாம்பியன் பட்டத்தையும் அல்கராஸ் தட்டிச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்