ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர், அரையிறுதி சுற்று - முதல் போட்டியில் பெங்களூரு வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து அரைஇறுதி சுற்றில் கொல்கத்தா அணியை பெங்களூரு அணி வீழ்த்தியது
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர், அரையிறுதி சுற்று - முதல் போட்டியில் பெங்களூரு வெற்றி
Published on

ஐ.எஸ்.எல். கால்பந்து அரைஇறுதி சுற்றில் கொல்கத்தா அணியை பெங்களூரு அணி வீழ்த்தியது. பெங்களூரு - கொல்கத்தா அணிகள் இடையிலான அரைஇறுதியின் முதற்கட்ட ஆட்டம் பெங்களூருவில் நேற்றிரவு நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், 31-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் பிரவுன் கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 84-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ராய் கிருஷ்ணாவை இடறி விட்டதால் பெங்களூரு வீரர் நிஷூ குமார் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். முடிவில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com