Ind vs Pak | T20 Worldcup | டி20 வேர்ல்டுகப்பில் இருந்து வெளியேறுகிறதா பாகிஸ்தான்?
டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்ற வீரர்களே பெரும்பாலும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.
அணியின் கேப்டனாக சல்மான் ஆகா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரஃப் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சல்மான் ஆகா, அப்ரார் அகமது, பாபர் அசாம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஜமான், கவாஜா நஃபே, முகமது நவாஸ், சல்மான் மிர்சா, நசீம் ஷா, சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஷஹீன் ஷா அப்ரிடி, ஷதாப் கான் மற்றும் உஸ்மான் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக இந்த தொடரிலிருந்து வங்கதேசம் விலகிய நிலையில், டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதையும் இன்னும் பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
