ஷிகர் தவானுக்கு தொடர்பா..? ED அதிரடி விசாரணை
சட்டவிரோத சூதாட்ட செயலி தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
1 X BET என்ற ஆன்லைன் பெட்டிங் நிறுவனத்துடன் ஷிகர் தவானுக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் நேரில் ஆஜராகுமாரு தவானுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்பேரில், காலை 11 மணியளவில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்ற தவானிடம், சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்பாக பல்வேறு தகவல்களை கேட்டறிந்தனர். பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் அவரது வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்தனர். ஏற்கனவே இதே வழக்கு தொடர்பாக கிரிக்கெட்டர் சுரேஷ் ரெய்னா, நடிகர் ராணா டகுபதியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
Next Story
