தேசிய கீத சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈரான் மகளிர் அணி

ஆஸ்திரேலியாவில் நடந்த ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் தென் கொரியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தங்கள் நாட்டின் தேசிய கீதத்தை ஈரான் மகளிர் அணியினர் பாடாதது சர்ச்சையாகிய நிலையில், ஞாயிறன்று பிலிப்பைன்ஸ்-க்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஈரான் மகளிர் கால்பந்து அணியினர் தேசிய கீதத்தை பாடினர். முன்னதாக தேசிய கீதத்தை பாட மறுத்த ஈரான் மகளிர் கால்பந்து அணியினரை 'போர்க்கால துரோகிகள்' என அந்நாட்டு அரசு தொலைக்காட்சி விமர்சித்திருந்த நிலையில், அரசின் அழுத்தம் காரணமாக அவர்கள் தற்போது தேசிய கீதத்தை பாடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தென் கொரியாவுடனான தங்களது முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஈரான் மகளிர் கால்பந்து அணி, இரண்டாவது போட்டியிலும் பிலிப்பைன்ஸிடம் தோல்வியடைந்ததால் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

X

Thanthi TV
www.thanthitv.com