SRH Vs MI..முதல் வெற்றி யாருக்கு? | IPL 2024 | SRHvsMi

SRH Vs MI..முதல் வெற்றி யாருக்கு? | IPL 2024 | SRHvsMi
Published on

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 8வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் மும்பை அணி 12 முறையும் ஹைதராபாத் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு சீசனில் இரு அணிகளும் தாங்கள் ஆடிய முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், முதல் வெற்றியைப் பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com