IPL - பவலுக்கு பதிலாக KKRல் இணைந்த ஷிவம் சுக்லா

x

ஐபிஎல் தொடரில் ரோமன் பவலுக்கு (Rovman Powell) மாற்றாக கொல்கத்தா அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஷிவம் சுக்லா (shivam shukla) இணைந்துள்ளார். கொல்கத்தா அணியில் இடம்பெற்று இருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோமன் பவல் மருத்துவக் காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஷிவம் சுக்லாவை கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்துள்ளது. மிஸ்ட்ரி ஸ்பின்னர் mystery spinner என அறியப்படும் ஷிவம் சுக்லா, மத்தியப் பிரதேச டி20 லீக் தொடரில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்