முதல் ஓவரிலேயே மேட்சை முடித்த ஆர்ச்சர் - பஞ்சாப்பை கதற விட்ட ராஜஸ்தான்

x

சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களை குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் நிர்ணயித்த 206 ரன்களை எட்ட முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து ராஜஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்