#JUSTIN || IPL Gambling | PBKS vs CSK மேட்சை வைத்து சூதாட்டம் - சென்னையில் சிக்கிய 3 பேர்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர்கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. சென்னையில் போட்டி நடைபெறும் சமயத்தில் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபடுவது வழக்கம். நேற்றும் அதனை போல கண்காணித்த போது கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையரின் தனிப்படை போலீசாருக்கு ரகசியல் ஐபிஎல் சூதாட்டம் நடைப்பெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.குறிப்பாக சவுகார்பேட்டை பகுதியில் ஐபிஎல் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்துள்ளது.
தனிப்படை போலீசார் சவுகார்பேட்டை மிண்ட் தெருவில் ஒரு வீட்டில் சோதனை நடத்திய போது பெரம்பூரைச் சேர்ந்த ஆகாஷ் ஜெயின், கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குமார், வேப்பேரி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோர் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவது தெரிந்தது. தனிப்படை போலீசார் 3 பேரையும் பிடித்து வேப்பேரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
