ஐபிஎல் திருவிழா லக்னோ Vs மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதும் 45வது லீக் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ஐபிஎல் தொடர்களில் இந்த 2 அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் லக்னோ 6 போட்டிகளிலும், மும்பை ஒரே ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. தொடர்ந்து டெல்லி மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அடுத்த சுற்று வாய்ப்பை விரைந்து கைப்பற்ற இரு அணிகளுக்கும் தொடர் வெற்றிகள் அவசியம் என்பதால் வெற்றி பெறும் முனைப்புடன் இரு அணிகளும் களமிறங்கவுள்ளன.
Next Story
