ஐபிஎல் - பெங்களூர் அணியின் பெயர் மாற்றம்... ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்றம்

ஐபிஎல் - பெங்களூர் அணியின் பெயர் மாற்றம்... ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்றம்
Published on

ஐபிஎல் தொடரையொட்டி ஆர்.சி.பி அணியின் பெயர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்றப்பட்டுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி அணியின் unbox event நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆர்.சி.பி ஆடவர் கேப்டன் டூபிளஸ்ஸி, நட்சத்திர வீரர் விராட் கோலி, ஆர்.சி.பி மகளிர் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் மகளிர் ப்ரீமியர் லீக் கோப்பையை வென்ற ஆர்.சி.பி அணி வீராங்கனைகளுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆர்.சி.பி. ஆடவர் அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகப்படுத்தப்பட்டது. ஹால் ஆஃப் ஃபேம் விருது (hall of fame) ஆர்.சி.பி முன்னாள் வீரர் வினய் குமாருக்கு வழங்கப்பட்டது. மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பெயர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்றப்பட்டு, புதிய லோகோ அறிமுகப்படுத்தப்பட்டது

X

Thanthi TV
www.thanthitv.com