IPL 2025.. மிரட்டிய மிட்செல் ஸ்டார்க் - சூப்பர் ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி
ஐபிஎல் தொடர்ல பரபரப்பா நடைபெற்ற லீக் போட்டில ராஜஸ்தான சூப்பர் ஓவர்ல வீழ்த்தி த்ரில் வெற்றிய ருசிச்சுருக்கு டெல்லி...
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்துல நடந்த இந்த போட்டில முதல்ல பேட்டிங் பன்ன டெல்லி அணி விரைவா Fraser-McGurk கருண் நாயர் விக்கெட்ட இழந்துச்சு...
3வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல், அபிஷேக் போரல் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைக்க, டெல்லி ஸ்கோர் உயர்ந்துச்சு...
ராகுல் 38 ரன்னும் அபிஷேக் போரல் 49 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஸ்டப்ஸும் அக்சர் படேலும் அதிரடி காட்டுனாங்க... இவங்களோட பங்களிப்பால 20 ஓவர் முடிவுல 5 விக்கெட்ட இழந்து 188 ரன் குவிச்சுச்சு டெல்லி...
அடுத்து 189 ரன் இலக்க நோக்கி ஆடுன ராஜஸ்தானுக்கு கேப்டன் சஞ்சு சாம்சனும் ஜெய்ஸ்வாலும் சூப்பர் ஸ்டார்ட் தந்தாங்க...
31 ரன்னுல சாம்சன் காயம் அடைஞ்சு retired hurt ஆக, ரியான் பராக் 8 ரன்னுக்கு அக்சர் படேல் ஓவர்ல போல்டானாரு...
மறுமுனைல ஜெய்ஸ்வால் அரைசதம் அடிச்சு ஆட்டமிழக்க, நிதிஷ் ரானா quickfire இன்னிங்ஸ் ஆடி அரைசதம் அடிச்சாரு..
போட்டி ராஜஸ்தான் பக்கம் போய்ட்டு இருந்தப்ப ரானா விக்கெட்ட வீழ்த்தி போட்டில திருப்புமுனை தந்தாரு மிட்ச்செல் ஸ்டார்க்...
அடுத்தடுத்த ஓவர்கள்ள ராஜஸ்தான் ரன் சேர்க்க, கடைசி ஓவர்ல ராஜஸ்தான் வெற்றிக்கு வெறும் 9 ரன்தான் தேவைப்பட்டுச்சு..
ஆனா கடைசி ஓவர மிட்ச்செல் ஸ்டார்க் மிரட்டலா வீச, தடுமாறுன ராஜஸ்தான் 8 ரன் மட்டுமே எடுத்துச்சு... இறுதில போட்டி டை ஆச்சு....
பரபரப்பான போட்டி டை ஆனதால இந்த சீசனோட முதல் சூப்பர் ஓவருக்கு கேம் செல்ல, சூப்பர் ஓவர்ல ஸ்டார்க்க எதிர்கொண்ட ராஜஸ்தான் வீரர்கள் ஹெட்மயரும் பராக்கும் சேர்ந்து 11 ரன் எடுத்து விக்கெட்டயும் இழந்தாங்க...
12 ரன் எடுத்தா வெற்றினு களமிறங்குன டெல்லி வீரர்கள் ராகுலும் ஸ்டப்ஸும், சந்தீப் சர்மா ஓவர்ல பவுண்டரிகள பறக்கவிட்டு நாலாவது பந்துலயே டெல்லிக்கு வெற்றி தேடித் தந்தாங்க...
சூப்பர் ஓவர்ல த்ரில் வெற்றி பெற்ற டெல்லி, நடப்பு சீசன்ல தங்களோட ஐந்தாவது வெற்றியயும் பதிவு செஞ்சு புள்ளிப்பட்டியல்ல முதலிடத்துக்கு முன்னேறி கெத்து காட்டி இருக்கு...
