2025 Champions Trophy ஃபைனல்.. 25 வருட தீரா பகையை முடிக்குமா இந்தியா? | India vs New Zealand

x

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. கடந்த 2000ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இரு அணிகளும் மோதிய போட்டியில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது 25 ஆண்டுகளுக்குப் பின் இரு அணிகளும் மீண்டும் பைனலில் மோதுவதால், ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. துபாயில் இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், போட்டிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்