

உலக விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் கடந்த 20 நாட்களாக இதற்கான வாக்கெடுப்பு இணையத்தில் நடத்தப்பட்டது. தேர்வு பட்டியலில் ராணி ராம்பால் உட்பட 25 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் 1 லட்சத்து 99 ஆயிரத்தி 477 வாக்குகளை பெற்று ராணி ராம்பால் விருதை தட்டிச் சென்றுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் தகுதி போட்டியில் ராணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.