இந்திய - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி வரும் 15 ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண்பதற்கான நுழைவு டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. கிரிக்கெட் ரசிகர்கள் வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர். இந்த போட்டியில் டோனி விளையாடவில்லை என்றாலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி சென்னையில் விளையாடுவதால் ரசிகர்கள் போட்டியை காண ஆர்வமாக உள்ளனர்.