சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பல நாட்களுக்கு பிறகு சென்னையில் நடக்கும் போட்டி என்றாலும், சென்னை ரசிகர்களின் பிடித்தமான வீரர் தோனி அணியில் இல்லாததால், ரசிகர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது.