தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெ​ஸ்ட் - இந்திய வீரர் மாயங் அகர்வால் சதம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெ​ஸ்ட் போட்டியில் இந்திய வீரர் மாயங் அகர்வால் சதம் விளாசினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெ​ஸ்ட் - இந்திய வீரர் மாயங் அகர்வால் சதம்
Published on
புனேவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் ரோஹித் சர்மா 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க, புஜாரா 58 ரன்கள் எடுத்து வெளியேறினார். சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் மாயங் அகர்வால், தொடர்ந்து 2வது சதத்தை பூர்த்தி செய்து 108 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் கோலி அரைசதம் கடந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 63 ரன்களுடனும், ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com