India Vs Pakistan | Asia Cup 2025 | பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா.. கங்குலி சொன்ன வார்த்தை

ஆசிய கோப்பை தொடரில், இந்தியா சிறப்பாக விளையாடி, கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை தொடர், சூப்பர் 4 சுற்றின் 2வது போட்டியில், பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சௌரவ் கங்குலி, இந்தியா நல்ல அணியை பெற்றுள்ளதால் பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி விட்டது என்று தெரிவித்தார். இந்த தொடரில் இந்திய அணி நன்றாக விளையாடும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், இந்தியா கோப்பையை வெல்வதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com