நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி - இந்திய அணி 347 ரன்கள் குவித்தும் தோல்வி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 347 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவியது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி - இந்திய அணி 347 ரன்கள் குவித்தும் தோல்வி
Published on

ஹாமில்டன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி சார்பாக அறிமுக வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 20 ரன்களும், மாயங் அகர்வால் 32 ரன்களும் எடுத்தனர். கேப்டன் கோலி 51 ரன்களில் வெளியேற, சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசினார். இறுதியில் கே.எல்.ராகுல்,தன் பங்கிற்கு 88 ரன்கள் விளாச இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்தது. 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கப்தில் 32 ரன்களில் வெளியேறினார். கேப்டன் டாம் லாத்தம், நிக்கோலஸ் ஆகியோர் அரைசதம் கடக்க, கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ராஸ் டைலர் சதம் விளாசினார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 48 புள்ளி 1வது ஓவரில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com