இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் - இனி டெண்டுல்கர்-ஆன்டர்சன் டிராபி

x

இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் தொடருக்கு டெண்டுல்கர் - ஆன்டர்சன் டிராபி (TENDULKAR-ANDERSON TROPHY) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 20ம் தேதி லீட்ஸ் நகரில் தொடங்குகிறது. முன்னதாக இந்த தொடர் பட்டோடி டிராபி என அழைக்கப்பட்டு வந்த நிலையில், தொடரின் பெயரை மாற்ற இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உத்தேசித்து இருந்தது. இந்நிலையில், இரு அணிகளின் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜேம்ஸ் ஆன்டர்சனை கவுரவிக்கும் விதமாக இந்த தொடருக்கு டெண்டுல்கர் - ஆன்டர்சன் டிராபி என பெயர் மாற்றப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்