இந்தியா VS இங்கிலாந்து - சென்னையில் நாளை டி20 போட்டி - எகிறும் எதிர்பார்ப்பு
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. முதல் போட்டியில் வென்ற உற்சாகத்துடன் இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது. கொல்கத்தாவில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களிடம் தடுமாறிய இங்கிலாந்து பேட்டர்கள்,, சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சென்னை ஆடுகளத்திலும் திணறக்கூடும். வெற்றிக்கணக்கை நீட்டிக்கும் முயற்சியில் இந்தியாவும், வெற்றியைத் தொடங்கும் முனைப்பில் இங்கிலாந்தும் இந்தப் போட்டியில் களமிறங்க உள்ள நிலையில், சென்னையில் போட்டி நடைபெற இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

