இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் : இங்கிலாந்து 246 க்கு ஆல்-அவுட்

இந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் : இங்கிலாந்து 246 க்கு ஆல்-அவுட்
Published on
இந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி விளையாடியது. இந்திய வீரர் பூம்ரா தனது முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். தொடக்கம் முதலே தடுமாறிய அந்த அணி 15 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து திணறியது. இறுதியில் 76 புள்ளி 4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தது.
X

Thanthi TV
www.thanthitv.com