

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் விராட் கோலி தலைமையில் ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், ஷிவம் துபே, சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல தாக்கூர், நவ்தீப் சைனி, பும்ரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ரிஷப் பந்த், ஷிவம் துபே, சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி இடம் பெற்றுள்ளனர். காயம் காரணமாக நீண்ட காலமாக ஓய்வில் இருந்த உலகின் முன்னனி வேகப்பந்து வீச்சாரளான ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியது ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.