எங்கே பனி? ஒத்திவைக்கப்பட்ட கேலோ இந்தியா குளிர்கால போட்டிகள்
ஐந்தாவது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் முதற்கட்டமாக லடாக்கின் லே பகுதியில் நடைபெற்றது. கடந்த ஜனவரி 23முதல் 27 வரை ஐஸ் ஹாக்கி போட்டிகளும், ஜனவரி 24 முதல் 27 வரை ஐஸ் ஸ்கேட்டிங் போட்டிகளும் நடைபெற்றன. இந்நிலையில், பல்வேறு பனிச்சறுக்கு போட்டிகள் கொண்ட இதன் 2ஆம் கட்டம், ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் பிப்ரவரி 22 முதல் 25 வரை நடைபெற இருந்தது. ஆனால், பருவநிலை மாற்றத்தால், குறைவான பனிப்பொழிவு காரணமாக, போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் உமர் அப்துல்லா, வரும் நாட்களில் பனிப்பொழிவு அதிகமானால், மார்ச் முதல் வாரத்தில் போட்டிகள் நடைபெறும் என்று நம்புவதாக தெரிவித்தார்.
Next Story
