இந்தியா ஓபன் - பி.வி. சிந்து போராடி தோல்வி

இந்தியா ஓபன்  - பி.வி. சிந்து போராடி தோல்வி
x

இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் களமிறங்கிய பி.வி. சிந்து, அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்று அசத்தினார். காலிறுதியில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தோனிஷியாவின் கிரிகோரியாவை எதிர்கொண்ட சிந்து, முதல் செட்டை 9க்கு 21 என்ற கணக்கில் இழந்தாலும், இரண்டாவது செட்டை 21க்கு 19 என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார். எனினும், இறுதி செட்டை 17க்கு 21 என நழுவவிட்டதால் தோல்வியுடன் வெளியேறினார்.


Next Story

மேலும் செய்திகள்