இங்கிலாந்தை சுருட்டிய இந்தியா.. 145 ரன்களில் ஆல் அவுட்

இங்கிலாந்தை சுருட்டிய இந்தியா.. 145 ரன்களில் ஆல் அவுட்
Published on

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டி, பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் குல்தீப் யாதவ் 28 ரன்களுக்கும், சிறப்பாக ஆடிய துருவ் ஜுரல் 90 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்சில் இந்தியா 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து, 46 ரன்கள் முன்னிலையோடு 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்திற்கு, ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இன்னிங்சின் 4வது ஓவரிலேயே டக்கெட், ஆலி போப் ஆகிய இருவரையும், அஸ்வின் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றினார். தொடர்ந்து ஜோ ரூட்டின் விக்கெட்டையும் வீழ்த்தினார். சாக் கிராலி, ஸ்டோக்ஸ் ஆகியோர் குல்தீப் யாதவிடம் வீழ்ந்தனர். இதனால் அந்த அணி, 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com