பதிலடி கொடுத்தது இந்தியா - பந்து வீச்சாளர்கள் அபாரம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த நிலையில், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை ஊட்டியுள்ளனர்.
பதிலடி கொடுத்தது இந்தியா - பந்து வீச்சாளர்கள் அபாரம்
Published on

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த நிலையில், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை ஊட்டியுள்ளனர். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் தங்களுக்கே உரித்தான பாணியில் 250 ரன்களுக்கு இந்திய அணியை சுருட்டினர்.பெரும்பாலான நட்சத்திர வீர‌ர்கள் இன்றி களமிறங்கியுள்ள ஆஸ்திரேலிய அணியை, இந்த முறை அதன் சொந்தமண்ணிலே வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இந்திய அணியின் பேட்டிங் ஏமாற்றம் அளித்த‌து. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். அந்த அணியின் TRAVIS HEAD மட்டும் அரைசதம் கடக்க மற்ற வீர‌ர்கள் சொற்ப ரன்களில் வெளியேற்றப்பட்டனர். இதனால் அந்த அணி, 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த‌து. இந்திய அணியின் அஷ்வின் மற்றும் பும்ரா மூன்று விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்த வாய்ப்பை இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது இரண்டாவது இன்னிங்சில் சரியாக பயன்படுத்திகொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com