வெஸ்ட் இண்டீஸ் அணி ஒயிட்வாஷ் - இந்தியா அசத்தல்
கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று, வெஸ்ட் இண்டீசை இந்திய அணி ஒயிட்வாஷ் செய்துள்ளது.
கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று, வெஸ்ட் இண்டீசை இந்திய அணி ஒயிட்வாஷ் செய்துள்ளது. அகமதாபாத்தில் நடந்த போட்டியில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 265 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக, ஷ்ரேயாஸ் ஐயர் 80 ரன்களும், ரிஷப் பண்ட் 56 ரன்களும் எடுத்தனர். இதனை தொடர்ந்து, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 37வது ஓவரிலேயே169 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றி உள்ளது.
