Ind Vs Sa Test | Gautam Gambhir | பதவி விலகுகிறாரா கம்பீர்?.. பிரஸ்மீட்டில் சொன்ன `அந்த' விஷயம்
- சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் இந்திய அணியை தென் ஆப்பிரிக்கா அணி வொயிட் வாஷ் செய்து சாதனை படைத்துள்ளதை தொடர்ந்து, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பதவி விலகுவாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அதற்கு அவரே பதில் அளித்துள்ளார்.
- இந்திய அணியை இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வீழ்த்தி 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது, தென்னாப்பிரிக்கா அணி.
- இதற்கு முன்பு கம்பீர் தலைமையில் இந்திய அணியை சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியும் வொயிட் வாஷ் WHITE WASH செய்திருந்தது.அதோடு, கவுதம் கம்பீர் தலைமையில் எதிர்கொண்ட 19 டெஸ்ட் போட்டிகளில் பத்து போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
- இந்தத் தொடர் தோல்விகளால்... செய்தியாளர்கள் சந்திப்பின்போது, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நீடிப்பாரா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
- இதற்கு பதிலளித்த கவுதம் கம்பீர், இதைப்பற்றி பிசிசிஐ தான் முடிவெடுக்க வேண்டும் என்றும்...கிரிக்கெட் தான் முக்கியமே தவிர தான் அல்ல என்றும் கூறியிருக்கிறார்.
- அதே வேளையில் தனது பயிற்சியின்கீழ்தன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா டிரா செய்ததாகவும், சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை ஆகியவற்றை வென்றதாகவும் கம்பீர் தெரிவித்துள்ளார்.
- தோல்விக்கு ஒரு தனிநபர் மட்டும் பொறுப்பு அல்ல. எல்லோரும் பொறுப்பு என்று தெரிவித்துள்ள கம்பீர்,ஆனால் தவறு என்னிடம் இருந்தே தொடங்குகிறது. இதுவரை தோல்விக்கு தனிப்பட்ட நபர்களை நான் குற்றம் சாட்டியதில்லை, எதிர்காலத்திலும் குற்றம் சாட்ட மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
Next Story
