Ind vs Pak U19 | பாகிஸ்தானை சம்பவம் செய்து வெளியேற்றி கதறவிட்ட இந்தியா
U-19 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் சிக்ஸ் சுற்றின் இறுதி ஆட்டத்தில் குரூப் 2 பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது. 253 என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 46.2 ஓவர்களில் 194 ரன்கள் ஆல் அவுட் ஆனதால் இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. முன்னதாக 151 ரன்களுக்கு வெறும் இரண்டு விக்கெட் களை மட்டுமே இழந்திருந்த பாகிஸ்தான் அணி, 43 ரன்கள் எடுக்க எட்டு விக்கெட்களை இழந்ததால் தோல்வியை தழுவியது. அரை இறுதியில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
