Ind vs Pak| ``உலக மேப்பில் பாக். இருக்கணுமா வேண்டாமா?’’ - கடைசி வாய்ப்பு கொடுத்த இந்திய ராணுவ தளபதி
பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தவில்லை எனில், உலக வரைபடத்திலேயே பாகிஸ்தான் இருக்காது என்று இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர திவிவேதி எச்சரித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், அனுப்கரில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்தால் ஆப்ரேஷன் சிந்தூரில் செய்த கட்டுப்பாட்டை நாங்கள் மீண்டும் கடைபிடிக்க மாட்டோம் என்றார்.உலக வரைபடத்தில் இருக்க வேண்டுமெனில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும்,வரைபடத்தில் இருக்க வேண்டுமா? இல்லையா? என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
Next Story
