Ind vs Pak | Asia Cup 2025 | கைகுலுக்காத பிரச்சனை - உச்சகட்ட பதற்றத்தில் இந்தியா-பாக். மேட்ச்
ஆசியக்கோப்பை - மீண்டும் இந்தியா-பாக். இன்று பலப்பரீட்சை
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில், கடந்த போட்டியில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்றது பேசுபொருளான நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதுகின்றன... ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஆசியக்கோப்பை தொடர் சூப்பர்-4 கட்டத்தை எட்டியுள்ளது. துபாயில் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் சூப்பர்-4 போட்டி ஒன்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கனவே லீக் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. அந்தப் போட்டி முடிந்தபோது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்றது பேசுபொருளானது. இதனைத் தொடர்ந்து போட்டி ரெஃப்ரி refree,, ஆன்டி பைக்ராஃப்ட் Andy Pycroft இந்தியாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம்சாட்டிய பாகிஸ்தான், அவரை நீக்காவிட்டால் அடுத்த போட்டிகளை புறக்கணிப்போம் என போர்க்கொடி தூக்கியது. ஆனால் பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சூழலில், அந்த அணி தொடர்ந்து விளையாடியது. இன்றையப் போட்டிக்கான செய்தியாளர் சந்திப்பை பாகிஸ்தான் புறக்கணித்த நிலையில், இன்றும் ஆன்டி பைக்ராஃப்ட்தான் ரெஃப்ரி ஆக செயல்படவுள்ளதாக தெரிகிறது. இதனால் போட்டியை பாகிஸ்தான் எவ்வாறு அணுகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
