

மவுண்ட் மாங்கனுவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன் சேர்த்தது. அதிகபட்சமாக 60 ரன் எடுத்த கேப்டன் ரோகித் சர்மா, காயமடைந்து ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினார். பின்னர், இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு156 ரன் மட்டுமே எடுத்து, 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை முழுமையாக கைப்பற்றி, இந்திய அணி அசத்தியுள்ளது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்ட நாயகனாகவும், கே.எல்.ராகுல் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.