Ind vs Ban | T20 Worldcup | டி20 வேர்ல்டுகப் - இந்தியா வர மறுத்த வங்கதேசத்திற்கு இடியை இறக்கிய ICC
டி20 உலகக்கோப்பையில் விளையாட இந்தியா வர மறுத்த வங்கதேச அணிக்கு மேலும் ஒரு நாள் அவகாசம்
டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது தொடர்பாக வங்கதேச அணிக்கு ஐசிசி மேலும் ஒருநாள் கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பாதுகாப்பு காரணங்களை கூறி இந்தியாவில் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பையில் தங்களது போட்டிகளை வேறு நாட்டில் நடத்த வலியுறுத்தியும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிடிவாதம் காட்டியது.
இதனை ஏற்க மறுத்த ஐசிசி, வங்கதேச அணி இந்தியா வந்து விளையாட மறுத்தால் வங்கதேசத்துக்கு பதிலாக தரவரிசையில் அடுத்த இடத்தில் இருக்கும் அணி டி20 உலக கோப்பையில் விளையாடும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஒருவேளை வங்கதேச அணி இந்தியா வர மறுத்தால், அந்த அணிக்கு பதிலாக குரூப் சி பிரிவில் ஸ்காட்லாந்து அணி இடம்பெறும் என்று தெரிகிறது.
