டாஸ் வென்று பந்துவீச்சை தீர்மானித்த இந்திய அணி, ஆரம்பம் முதலே ஆஸ்திரேலிய அணியை ஆட்டம் காண வைத்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணி, 230 ரன்களில் ஆஸ்திரேலிய அணியை சுருட்டியது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹான்ஸ்கோம்ப் மட்டும் அரைசதம் கடந்தார். இந்திய அணி சார்பில் சகால், 6 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.