Ind A Vs Aus A | Cricket | இளம் படையை வைத்து செய்த சம்பவம் - கெத்து காட்டிய ஷ்ரேயாஸ் ஐயர்

x

இந்திய ஏ அணியுடன், ஆஸ்திரேலிய ஏ அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இரு அணிகளும் ஒரு ஆட்டத்தில் வென்ற நிலையில், 3 ஆவது ஒருநாள் போட்டி கான்பூரில் நடந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய ஏ அணி 317 ரன்கள் குவித்தது. 318 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய ஏ அணி 46 ஓவர்களில் 322 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய ஏ அணியில் பிரப்சிம்ரன் சிங் சதம் கடந்து, 102 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷ்ரேயாஸ் 62 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 2க்கு 1 என்ற கணக்கில் ஷ்ரேயாஸ் தலைமையிலான இந்திய ஏ அணி தொடரை கைப்பற்றியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்