

19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி இறுதி போட்டிக்குள் நுழைய முக்கிய காரணமாக இருந்த இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஜெய்ஸ்வால், கிரிக்கெட் மீதிருந்த ஆர்வத்தில் மும்பை சென்றுள்ளார். அங்கு கிரிக்கெட் அகாடமியிலே தங்கிய அவர், பானிபூரி மற்றும் பழங்கள் விற்று அந்த நிதி மூலம் கிரிக்கெட்டுக்கான செலவுகளை கவனித்து வந்துள்ளார். இன்று, 17 வயதில் இந்திய அணியின் முதுகெலும்பாகவே அவர் மாறி நிற்பதை இளைஞர்கள் பலர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.