ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு : விராட் கோலி தொடர்ந்து முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் வீர‌ர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வீர‌ர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. அதில் 928 புள்ளிகளுடன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்தில் தொடர்கிறார். இந்த பட்டியலில் 4வது இடத்தில் புஜாரா, 6வது இடத்தில் ரஹானே ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை பும்ரா இந்தியா சார்பில் 6வது இடத்தை பிடித்திருக்கிறார். ஆல்ரவுண்டர் பிரிவில் இந்திய வீர‌ர் ஜடேஜா 2 வது இடத்தில் நீடிக்கிறார். அணிகளை பொறுத்தவரை 120 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com