இந்திய அணி மேலாளருக்கு ஐ.சி.சி. கண்டனம், போட்டியின் போது செல்போன் பயன்படுத்தியதால் சர்ச்சை

இந்திய அணி மேலாளருக்கு ஐ.சி.சி. கண்டனம், போட்டியின் போது செல்போன் பயன்படுத்தியதால் சர்ச்சை
இந்திய அணி மேலாளருக்கு ஐ.சி.சி. கண்டனம், போட்டியின் போது செல்போன் பயன்படுத்தியதால் சர்ச்சை
Published on
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரகானே, ஆப்கன் வீரர்களை கோப்பையுடன் புகைப்படம் எடுக்க அழைத்திருந்தார். இதனால் இந்திய அணிக்கும், கேப்டன் ரகானேவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், இந்திய அணியின் மேலாளர் சுனில் சுப்ரமணியம், செல்போன் உபயோகித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். போட்டியின்போது மொபைல்போன், டிஜிட்டல் வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்துவது விதி மீறல் என்பதால், ஐ.சி.சி. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com