ஐ.பி.எல். போட்டி - ஹைதராபாத் அணி வெற்றி

ஐ.பி.எல் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். போட்டி - ஹைதராபாத் அணி வெற்றி
Published on
ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 20 ஒவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் சதம் விளாசினார். இதனையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி, தொடக்கம் முதலே அசத்தலான ஆட்டத்தைவெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் வார்னர் 69 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
X

Thanthi TV
www.thanthitv.com