Hockey5s Asia Cup - ஷூட் அவுட்டில் பாக்-ஐ சுருட்டிய இந்தியா

x

ஆசிய ஐவர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சாம்பியன் ஆகியுள்ளது.

ஓமனின் சலாலா நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தானும் இந்தியாவும் மோதின. நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 4 கோல்கள் அடித்து சமனிலை வகித்தன. இதனையடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற ஷூட் அவுட்டில் இந்தியா 2 கோல்கள் அடித்த நிலையில், பாகிஸ்தான் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதனால் 2க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. மேலும், அடுத்த ஆண்டு ஓமனில் நடைபெறவுள்ள ஆடவர் ஐவர் ஹாக்கி உலகக்கோப்பை தொடருக்கும் இந்தியா தகுதி பெற்றுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்