ஹாக்கி இந்தியா லீக் - அரையிறுதியில் தமிழ்நாடு தோல்வி

x

ஒடிசாவில் நடைபெற்ற ஹாக்கி இந்தியா லீக் தொடரின் அரையிறுதி போட்டியில் பெங்கால் டைகர்ஸ் அணியிடம் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி தோல்வியை தழுவியது. விறுவிறுப்பாக நடைப்பெற்ற போட்டியில் ஆட்டநேர முடிவில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களை அடித்து சமநிலையில் இருந்தன. வெற்றியை தீர்மானிக்கும் பெனால்டி ஷூட் அவுட் முறையில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி பெங்கால் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. மற்றொரு அரையிறுதி போட்டியில் ஹைதராபாத் டூஃபான்ஸ் அணி, சூர்மா ஹாக்கி கிளப் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்