Jammu Kashmir | 67 வருடங்களில் இது தான் முதல் முறை | வரலாறு படைத்த ஜம்மு காஷ்மீர்
Ranji trophy | Jammu Kashmir | 67 வருடங்களில் இது தான் முதல் முறை | வரலாறு படைத்த ஜம்மு காஷ்மீர் #ranjitrophy #jammukashmir #cricket #thanthitv ரஞ்சி கோப்பை - வரலாறு படைத்த ஜம்மு காஷ்மீர் அணி ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெற்று, ஜம்மு காஷ்மீர் அணி வரலாறு படைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், பெங்கால் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இதனால், ரஞ்சி கோப்பை தொடரில் ஜம்மு காஷ்மீர் அணி அறிமுகமான 67 வருடங்களில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல்முறையாகும்.... இதில், 9 விக்கெட்டுகள் மற்றும் 42 ரன்களை குவித்த ஜம்மு காஷ்மீரின் ஆல்ரவுண்டரான அகிப் நபி தார் (Auqib Nabi Dar), மற்றும் ஐபிஎலில் லக்னோ அணிக்கு விளையாடும் ஆல்ரவுண்டரான அப்துல் சமாத் 112 ரன்களும் எடுத்து, இந்த வரலாறு படைக்க முக்கிய காரணமாக அமைந்தனர். இதையடுத்து டிரஸிங் ரூமில், தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வீரரும் தங்கள் ஸ்டைலில் நடனமாடிய காட்சிகள் வெளியாகியுள்ளது.
