ஹைலோ ஓபன் 2025 - 2வது சுற்றுக்கு முன்னேறிய 'லக்ஷ்யா சென்'
ஹைலோ ஓபன் 2025 - 2வது சுற்றுக்கு முன்னேறிய 'லக்ஷ்யா சென்'
ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபன் 2025 (Hylo Open 2025) பேட்மிண்டன் போட்டியில், இந்திய பேட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென் (Lakshya Sen), நடப்பு சாம்பியனும் உலகின் 7வது இடத்தில் உள்ள வீரருமான பிரான்சிஸ் கிறிஸ்டோ போபோவை (France’s Christo Popov) வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். அவரை, 47 நிமிடங்களில் 21-க்கு 16, 22-க்கு 20 என்ற செட் கணக்கில் லக்ஷ்யா சென் வென்றார். இவரை லக்ஷ்யா சென் வென்றது, இது 6வது முறையாகும். இதை அடுத்த சுற்றில் சக இந்திய பேட்மிண்டன் வீரரான சங்கர் சுப்பிரமணியனுக்கு எதிராக லக்ஷ்யா சென் விளையாட உள்ளார்.
Next Story
