ஹெலனிக் சாம்பியன்ஷிப் - அரையிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிச்

x

ஏதென்ஸில் நடைபெறும் ஹெலனிக் (Hellenic) டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியில் அவர் போர்ச்சுகலின் நுனோ போர்ஜஸை 7-க்கு 6, 6-க்கு 4 என்ற செட்களில் வென்றார். அதேபோல், இத்தாலியின் லோரென்சோ முசெட்டி, ஐந்தாவது நிலை வீரர் அலெக்ஸாண்ட்ரே முல்லரை 6-க்கு 2, 6-க்கு 4 என்ற கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார். முசெட்டி அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை எதிர்கொள்ளவிருக்கிறார், ஜோகோவிச் தனது அரையிறுதியில் யானிக் ஹான்ஃப்மானை எதிர்கொள்ள உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்