இதுவரை கேட்டிரா `இன்ப அதிர்ச்சி’ - யார் ஜெயித்தாலும் இந்தியாவுக்கே உலகக் கோப்பை

x

இறுதிப் போட்டியில் இரு இந்தியர்கள் - கோனெரு ஹம்பி Vs திவ்யா தேஷ்முக்

மகளிர் செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இரு இந்தியர்கள் முன்னேறி இருப்பதன் மூலம் இந்தியா தனது முதல் மகளிர் உலகக் கோப்பை பட்டத்தை உறுதி செய்துள்ளது. ஜார்ஜியாவில் நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை செஸ் அரையிறுதிப் போட்டிகளில் இரு சீன வீராங்கனைகளை எதிர்த்து விளையாடிய இந்தியாவின் திவ்யா தேஷ்முக் மற்றும் கோனெரு ஹம்பி ஆகிய இருவரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. அரையிறுதியில் சீனாவின் லெய் டிங்ஜியுடனான இரண்டு ஆட்டங்களையும் டிரா செய்த கோனெரு ஹம்பி, டை பிரேக்கர் ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதி போட்டியில் மற்றொரு இந்தியரான திவ்யா தேஷ்முக்-ஐ எதிர்கொள்ளவுள்ளார். இறுதிப் போட்டி நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்