Gyaneshwari Yadav | Commonwealth | இந்தியாவுக்கு மேலும் ஒரு மகுடம்.. குவியும் பதக்கங்கள்

Gyaneshwari Yadav | Commonwealth | இந்தியாவுக்கு மேலும் ஒரு மகுடம்.. குவியும் பதக்கங்கள்

Gyaneshwari Yadav | Commonwealth | இந்தியாவுக்கு மேலும் ஒரு மகுடம்.. குவியும் பதக்கங்கள் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான 53 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்தியாவின் ஞானேஸ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். காமன்வெல்த் போட்டியில் அறிமுகமான தனது முதல் தொடரிலேயே சத்தீஸ்கரைச் சேர்ந்த 23 வயதான ஞானேஸ்வரி யாதவ் ஸ்னாட்ச் பிரிவில் 88 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோவும் என மொத்தம் 199 கிலோ எடையைத் தூக்கிப் புதிய காமன்வெல்த் சாதனைகளுடன் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.நைஜீரியாவின் ஓனோமே டிடிஹ்(Omolola Didih) 206 கிலோ தூக்கி தங்கப் பதக்கத்தைக் தட்டிச் சென்றார்.இவருடைய இந்த வெற்றியின் மூலம், காமன்வெல்த் 2026 தொடரில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 1 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 5 ஆக உயர்ந்துள்ளது. சாதனைகள் படைத்து வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி யாதவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com