நாட்டின் மிக இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் - சென்னையை சேர்ந்த 12 வயது சிறுவன் சாதனை

நாட்டின் மிக இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன சென்னையை சேர்ந்த 12 வயது மாணவர் குகேஷ்-க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாட்டின் மிக இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் - சென்னையை சேர்ந்த 12 வயது சிறுவன் சாதனை
Published on
டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ், கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார். மேலும்.12 வயதே ஆன குகேஷ் நாட்டின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார். உலகிலேயே 2வது இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையும் குகேஷுக்கு கிடைத்துள்ளது உலக சாம்பியன்ஷிப் பெற அதிக கவனம் செலுத்தி பயிற்சி எடுக்க உள்ளதாக குகேஷ் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com